உள்நாடு

கற்பிட்டியில் உணவுத்தன்னாதிக்கம் மற்றும் சுற்றாடல் தொடர்பான கலந்துரையாடல்

கற்பிட்டி புதுக்குடியிருப்பு தில்லையூர் மீனவ கிராமத்தில் உணவு தன்னாதிக்கம் மற்றும் சுற்றாடல் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மீனவக் குழுத் தலைவர் அன்வர்தீன் தலைமையில் தில்லையூர் மீனவ சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.

இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சிவில் சமூக ஒன்றியத்தின் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லையூர் மீனவ சங்கத்தின் தலைவர் சபுறுல்லாஹ்மீனவ தொழிற்சங்கத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களை தில்லையூர் மீனவர்களுக்கு வழங்கியதுடன்
உணவு தன்னாதிக்கம் மற்றும் சுற்றாடல் பிரச்சினை தொடர்பான தரவுகளையும் இன்றைய நிலை பற்றிய தகவல்களையும் உள்ளடக்கிய உரை ஒன்றை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஜே. பத்மநாதன் நிகழ்த்தினார்.

இக்கலந்துரையாடலின் தீர்வாக உணவு தன்னாதிக்கத் திட்டமாக கற்பிட்டி தில்லையூர் கிராமத்தில் இயற்கையாக வளரக் கூடிய முருங்கை மரம் பற்றி கவனம் செலுத்தப்பட்டதுடன் இதற்கான கேள்வி, சந்தை வாய்ப்புக்கள் என்பன அதிகமாக காணப்படுகிறது எனவே “ஒருவர் ஒரு மரம் ” நடும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ. எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *