லங்கா பிரீமியர் லீக்கில் ”பவர் பிளாஸ்ட் ஓவர்கள்” அறிமுகம்
5ஆவது லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடரில் ஒவ்வொரு இன்னிங்ஸின் பிற்பகுதியிலும் ”பவர் பிளாஸ்ட் ஓவர்கள்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக லங்கன் பிரீமியர் லீக் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டடில் இடம்பெறவுள்ள 5ஆது லங்கன் பிரீமியர் லீக் தொடர் எதிர்ரும் ஜுலை மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகள்ளது. இதற்காக தற்சமயம் ஒவ்nhரு அணிகளும் தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இத் தொடர் தொடர்பில் போட்டி அமைப்பாளர்கள் குறிப்பிடுகையில், ”பவர் பிளாஸ்ட் ஓவர்கள்’ என்று பெயரிடப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பு, ஒவ்வொரு அணிக்கும் அவர்களின் இன்னிங்ஸின் 16 மற்றும் 17 வது ஓவர்களில் இரண்டு ஓவர் பவர் பிளேயை வழங்கும்.
இந்த புதிய பவர் ப்ளே ஒரு இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களில் நிகழும் பாரம்பரிய பவர் பிளேயிற்கு கூடுதலாக இருக்கும். பவர் பிளாஸ்ட் ஓவர்களின் போது, நான்கு பீல்டர்கள் மட்டுமே பவர் பிளே வட்டத்திற்கு வெளியே அனுமதிக்கப்படுவார்கள், இதனால் ஆட்டத்தின் ஆக்ரோஷமான மற்றும் பரபரப்பான கட்டம் உருவாகும்.” என்றார்.
லங்கா பிரீமியர் லீக் 5ஆவது அத்தியாயத்தின் போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடன்வெல கூறுகையில், ”ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வரும் லீக்கிற்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதுமையை கொண்டு வர முடிவு செய்தோம். இந்தப் புதிய அறிமுகம் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை உருவாக்குவது உறுதி, மேலும் இந்தக் காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்த அணிகள் திறம்பட வியூகம் வகுக்க வேண்டும்.” என்று கூறினார்.