புத்தளத்தில் நடைபெற்ற சஹீரியன்ஸ்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி. நான்காவது முறையாகவும் சீகோன் ரெட் சம்பியனாகி சாதனை
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான “சோன்” அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “க்லேஷ் ஒப் சஹீரியன்ஸ் சீசன் 5” கால்ப்பந்தாட்ட போட்டி தொடர் அண்மையில் கல்லூரி மைதானத்தில் மின்னொளி யில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
புத்தளம் வை.எம்.ட்ரவல்ஸ் நிறுவனம் இத்தொடருக்கு பூரண அனுசரனையை வழங்கி இருந்தது. மொத்தமாக 40 பழைய மாணவர் சங்க அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இறுதிப்போட்டியில் சீகோன் ரெட் அணியும், சஹீரியன்ஸ் 14 அணியும் பலப்பரீட்சை நடாத்தின.
இறுதிப்போட்டியில் சீகோன் ஆணி (2015 சா/த, 2018 உ/த) 05 : 00 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று 04 வது முறையாகவும் சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.
போட்டி தொடரில் சீகோன் ரெட் அணியின் வீரரும், புத்தளம் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரருமான எம்.எம். முசாக்கிர் அதிக கோல்களை செலுத்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிறந்த கோல் காப்பாளருக்கான விருது பல்ஸ்ட் அணி வீரர் ஜப்ரிஸுக்கு வழங்கப்பட்டது.
சாம்பியனான சீகோ அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், இரண்டாம் இடம் பெற்ற சஹீரியன்ஸ் 14 அணிக்கு 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டதோடு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)