உள்நாடு

1600 உறுப்பினர்கள் பங்கேற்கும் ஜமாஅத்தே இஸ்லாமியின் வருடாந்த மாநாடு; சர்வோதயவுடன் ஒப்பந்தமும் கைச்சாத்து

ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு எதிர்வரும் 29 சனிக்கிழமை 06.2024 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப.04.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 1600 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக இன்று (26) தெமட்டகொடை வீதியில் உள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உதவிச் செயலாளர் எம்.எச்.எம். ஹசன் மற்றும் நிறைவேற்று அதிகாரி அப்துல் ரஹ்மானும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி 1954ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் இயக்கம் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையே தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மறுமலர்ச்சி நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. இவ் இயக்கம் இலங்கையில் முஸ்லிம்கள் சார்பாக இலங்கையில் அடிக்கடி ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் பல்வேறு சமூக அனர்த்தங்களுக்கு உடனடி உதவிகளையும். இரத்த தானம் , சிரமதானங்கள் . வாழ்வாதார உதவிகள் போன்ற பல சமூக சேவை செயற்பாடுகள் இலங்கையில் உள்ள சகல இன மக்களுக்கும் மத இன வேறுபாடின்றி இணைந்து செயல்பட்டு வந்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை வந்திருந்த ஜக்கிய நாடுகள் செயலாளர்கள் நாயகம் கொபி அனான், பில் கிளிங்டன் ஆகிய உலகத் தலைவர்களுடன் முஸ்லிம் சமூகம் சார்பாக சந்தித்து செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் அமைப்பின் அல்ஹஸனாத், எங்கள் தேசம் அஹ்ரம் தமிழ் சிங்கள மொழி மூலம் பிரபோதைய போன்ற சமூக அரசியல் இஸ்லாமிய வாராந்த பத்திரிகைகள், மாதாந்த இதழ்களையும் தொடர்ச்சியாக வெளியீட்டு வந்துள்ளது. அத்துடன் அல்குர்ஆன் சிங்கள மொழி மூலமும் வெளியீட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி சனிக்கிழமை பி.பகல் 04.30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1600 உறுப்பினர்கள் ஒன்று கூட உள்ளனர் அத்துடன் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பா.உறுப்பினர்கள் கல்விமான்கள், மத அறிஞர்கள் ஏனைய மதத் தலைவர்கள் பேராசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமிய தலைவர் அஷ்ஷேக் எம்.எச்.எம். உசையிர் இஸ்லாகி, தலைமையில் வைபவம் நடைபெறும். அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா, சர்வதோய தலைவர் டொக்டர் வின்னி ஆரியரத்தின, கலாநிதி ஜெஹான் பெரேரா, பேராசிரியர் சுமதி சிவமோகன், வல்பொல ராகுல நிறுவனத்தின் தலைவர் கல்கிந்த தர்மானந்த தேரோ, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நூர் ஆமித், மௌலவியா நஜிமுன் நிசா ஆகியோர்களும் உரையாற்றுவார்கள் அத்துடன் சர்வதோய தய இயக்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படும். 70 ஆண்டை முன்னிட்டு ஆண்டு இதழ் ஒன்றும் வெளியிடப்படும் என உதவிச் செயலாளர் ஹசன் தெரிவித்தார்.


(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *