உள்நாடு

நாட்டை கட்டியெழுப்ப தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவே; – ஐ.தே.க அமைப்பாளர் ராஜபுத்திர வீரசிங்க

உலகிலுள்ள நாடுகள் பார்த்து வியந்து பாராட்டுகின்ற தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஒருவர் மட்டுதான் இருக்கிறார். பொருளாதார ரீதியில் உடைந்து வீழ்ந்திருந்த நாட்டை குறுகிய காலத்தில் சுவிட்சமான ஒரு நாடாக கட்டியெழுப்பிய ஒரு தலைவர் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே. அவரைப் போன்று இந்நாட்டை கட்டியெழுப்பக் கூடிய தகுதியும் திறனும் வாய்ந்த தலைவர் வேறு எந்தக் கட்சியிலுமே இல்லை என்று தொடங்கலந்த ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சாஸ்திரிய ராஜபுத்திர வீரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தொடங்கலந்த ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ராஜாபுத்திர வீரசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், “எமது ஜனாதிபதி அவர்கள் நற்செய்தியை விடுத்துள்ளதாக அறிகின்றோம். என்ன அவர் அவ்வாறு விடுத்துள்ள நற்செய்தி என்று சொல்லுகின்ற விடயம் .சாதாரண மக்களும் அறிந்து கொள்வார்கள். எங்கள் நாட்டில் சமகாலத்தில் நடைபெற்ற சம்பவங்களையே நினைவூட்டுகின்றன. நம் நாட்டிலும் சரி உலகிலும் சரி வங்கியில், ஏனைய நிதி நிறுவனங்களில் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் எல்லா வங்கிகளும் கனணி மயப்படுத்தப்பட்டுள்ளது.

எங்களுடைய வங்கிகள் பற்றி நம்பிக்கை இருக்க வில்லை. அந்த நம்பிக்கை எல்லாம் முற்றாக இல்லாமற் செய்யப்பட்டு உலக நாடுகள் அறிந்து கொள்ளுமளவுக்கு வங்குரோத்து நிலையில் எமது நாடு காணப்பட்டது. உலக நாடுகளிலும் சர்வதேச வர்த்தகத் தொடர்புகளை மேற்கொள்ள வங்கிகளில் எல் சி ஒன்றை திறக்க முடியாது. யப்பானில் இருந்து வாகனம் ஒன்றைக் கொண்டு வரமுடியாது. வேறு தேவைக்காகவும் எல். சி ஒன்றை திறக்க முடியாது. எதையும் பணம் கொடுத்துத்தான் பொருளை வாங்க வேண்டும எங்களுடைய வங்கிகள் குறித்து நம்பிக்கை இருக்க வில்லை. நம்பிக்கை முற்றாக இல்லாமல் போய் வங்குரோத்து நிலைக்கு நாடு பின்னதள்ளப்பட்டிருந்தன.

சிறிய காலத்தில் கடன் திட்டங்களை மறுசீரமைத்து அந்த நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்தி மீளவும் உலக நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார் எமது ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்கள். இன்னும் ஒருவர் வந்தாலும் 10 வருடங்கள் சென்றாலும் இதைச் செய்திருக்க முடியாது. அதற்காகத்தான் நாங்கள் உரக்கப் பேசிக் கொண்டிருக்கின்றோம். எரிபொருள் இருக்கிறது. எரிவாயு இருக்கிறது. வேலை செய்யத் தெரியாது. தெரிந்தவர்களுக்கு செய்யச் செய்யக் கொடுப்பதில்லை. இப்படித்தான் மக்கள் இருக்கின்றார்கள். ஏனைய நாடுகள் இலங்கை எந்தளவு மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்தது.

சிறிய காலத்தில் மீளவும் கட்டியெழுப்பட்ட நாடாக உள்ளன. ஜனாதிபதி எந்தளவுக்கு முன்னேற்றியுள்ளார் என்று வெளியுலக நாட்டிலுள்ள மக்கள் வியந்து பாராட்டுகின்றார்கள். எங்கள் கட்சியின் தலைவர் ஜனாதிபதி இந்த நாட்டைக் கட்டி எழுப்பியது போன்று ஏனைய கட்சிகாரர்களால் செய்ய முடியாது நாம் அனைவரும் எமது ஜனாதிபதி செய்த வேவைப் போல அவர் முன்னெடுத்த பாதையில் நாங்களும் ஒன்றிணைந்து செல்வோமாயின் நல்ல சுவிட்சமான நாடொன்றை நாங்கள் கட்டியெழுப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *