விளையாட்டு

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியைத் துறந்தார் கிறிஸ் சில்வர்வுட்

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. பதவி விலகல் தொடர்பில் கிறிஸ் சில்வர்வுட் குறிப்பிடுகையில் ”ஒரு சர்வதேச பயிற்சியாளராக இருப்பது என்பது அன்பானவர்களிடமிருந்து நீண்ட காலத்திற்கு விலகி இருப்பதைக் குறிக்கிறது. எனது குடும்பத்தினருடன் மற்றும் கனத்த இதயத்துடன் நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு, நான் வீடு திரும்புவதற்கும், சில தரமான நேரத்தை ஒன்றாகச் செலவிடுவதற்கும் இப்போது நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன்.

நான் இலங்கையில் இருந்த காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக வீரர்கள், பயிற்சியாளர்கள், அறை ஊழியர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆகியற்றிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு வெற்றியும் கிடைத்திருக்காது.இலங்கை கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு ஒரு உண்மையான கௌரவமாகும், மேலும் நான் பல இனிமையான நினைவுகளை எடுத்துச் செல்வேன்.” என்று சில்வர்வுட் கூறினார்.

அவரது பதவிக்காலத்தில்இ இலங்கை தேசிய அணி 2022 இல் ஆசிய ரி20 தொடரை வென்றதுடன், 2023 இல் ஒருநாள் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியை எட்டியது. இலங்கை அணி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல இருதரப்பு தொடர் வெற்றிகளைப் பெற்றது. இவற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவர் வடிவத்தில் தொடரில் வெற்றி பெற்றது மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டிருந்தது.

கிறிஸ் சில்வர்வுட்டின் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க இலங்கை கிரிக்கெட் சபை வாழ்த.;துத் தெரிpத்துள்ளது. மேலும் இலங்கை கிரிக்கெட்டின் பயிற்சி ஆலோசகராக செயற்பட்ட மஹேல ஜயவர்தனவும் நேற்றைய தினம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *