உள்நாடு

மாவனல்லை பாதிபிய்யா மகா வித்தியாலய ஊடக குழு மாணவர்களுக்கான பயிற்சி நெறி

மாவனல்லை,ஹெம்மாதகம, மடுள்போவை பாதுபிய்யா மஹா வித்யாலயத்தின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகப் பயிற்சி முகாம் அண்மையில் பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்தில் அதிபர் ஏ டப்ளியூ இஸட்.ஸைனுல் ஹுஸைன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் ஆசிரியை எம் ஜ. நஜ்முன்னிஸா அவர்களின் கண்காணிப்பில் இடம்பெற்றது.

இதில் மாணவர்களுக்கு செய்தி எழுதுதல்,செய்தி வாசித்தல்,மேடை அறிவிப்பு, ஊடக நுட்பங்கள் என்பன ஆர் ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் சமூகப்பணி இளம் கலைமாணி மாணவரும் ஊடகத்துறையில் பல தேசிய விருதுகளை பெற்ற வானொலி அறிவிப்பாளர் ஏ எம். இன்ஷாப் நிகழ்வின் விரிவுரையாளராக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பாடசாலையின் ஊடகப் பிரிவு மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


(உமர் அறபாத் -ஏறாவூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *