உள்நாடு

தர்காநகர் அல் ஹம்ராவில் திக்வெல்லை கமாலுடன் ஓர் உரையாடல் நிகழ்வு..!

பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் அடுத்த நகர்வாக “நமது சிறுகதைகள் – திக்வெல்லை கமாலுடன் ஓர் உரையாடல்” எனும் நிகழ்வு, ஒன்றியத்தின் ஆலோசகர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு தர்கா நகர் அல்ஹம்றா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது. இது சிறுகதைகள் எவ்வாறு எழுதுவது? என்பது தொடர்பான ஒரு கருத்தரங்காக அமையவுள்ளது.

மேலும் பிராந்தியத்தில் எழுத்து, வாசிப்பு என்பவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடனேயே இவ்வாறான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள். இதன் நோக்கம், இளையவர்கள் குறிப்பாக மாணவர்கள் இத்துறை சார்ந்த நுட்பங்களைக் கற்றுக் கொள்வதனூடாக தமது திறன்களை வளர்த்துக்கொள்ள களமமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே.

எனவே, பிராந்தியத்தின் சகல முஸ்லிம் பாடசாலை மாணவர்களும் இந் நிகழ்வில் பங்குபற்றி பலனடைவார்கள் என்று எதிர் பார்ப்பதாக ஒன்றியத்தின் செயலாளர் பஸ்லி ஹமீட் அவர்கள் தெரிவித்தார்.

 

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *