உள்நாடு

சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத்தின் பொன் விழா நிகழ்வுகள்..!

சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத் அதின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த விழா ஏற்பாடுகள் குறித்தும் சீனன்கோட்டை பகுதியில் சாதுலிய்யா தரீக்கா வின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

சீனன் கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினரும், சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியா கலாபீட இணைச் செயளாலருமான அல்ஹாஜ் முஸ்னி உவைஸ் தலைமையில் 23ம் திகதி சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸிய்யா கலாபீட பாஸியா பிரதான மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

சீனன்கோட்டை குர்ஆன் மதாரிஸ் பணிப்பாளர் முகத்தமுஷ் ஷாதுலி மௌளவி எம்.டப்லியு. பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி ), வாழிபர் ஹழரா ஜெமா அத் தலைவர் இமாம் ஹஸன் முர்ஸி, இணைச் செயளாலர் முர்ஷித் ரியாம் உட்பட உறுப்பினர்கள், சீனன்கோட்டை ஜாமியதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீட நிர்வாக சபை உறுப்பினர்கள், வாலிபர் ஹலரா ஜமாஅத் ஆஷிகுர் ரஸுல் குழு உறுப்பினர்கள் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சீனன் கோட்டையில் ஷாதுலியா தரீக்காவின் வளர்ச்சி சம்மந்தமாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. பலரும் இதன்போது பல கருத்துக்களை முன்வைத்தனர். அத்தோடு வாழிபர் ஹழரா ஜெமா அத்தின் 50 வது நிறைவவையொட்டி நடைபெறவிருக்கும் மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்ச்சிகள்,இஸ்லாமிய சின்னங்களை காட்ச்சிப்படுத்தல், தலைமைத்துவ பயிற்சி போன்ற நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு சம்மந்தமாகவும் கலந்துறையாடப்பட்டது.

வாலிபர் ஹலரா ஜமாஅத் சிரேஷ்ட உறுப்பினர்களான அல்ஹாஜ் பர்ஹான் ரபா, அல்ஹாஜ் ரமீஸ் அபுல் வபா , அல்ஹாஜ் எம் எஸ் எம் நிஸாம் ஊடகவியலாளர் பீ.எம். முக்தார், ரிம்ஸான் ராஸிக் அரபாத் பழீல் அல்ஹாஜ் அரூஸின் ஜலால்தீன் , அல்ஹாஜ் ரியாஸ் பாஸி ஆகியோர் சாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

தலைவர் இமாம் ஹஸன் முர்ஸி 50 வது ஆண்டு பூர்த்தி விழாவை விரிவான முறையில் பல்வேறு வேலைத்திட்டங்களுடன் மேற்கொள்வது தொடர்பில் விளக்கமளித்தார். வாலிபர் ஹலரா ஜமாஅத்திற்கு மேலும் உறுப்பினர்களை இணைத்குக் கொண்டு அதன் செயற் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

சம்மாஸ் கரீம் நபீஸ் ஹாரிஸ் மௌளவி அம்ஜத் சாலி ( சாதுலி) முக்தாஸ் மும்தாஸ் அல்ஹாஜ் அஹ்லஸ் தாஜுதீன் உட்பட பலரும் இங்கு உரை நிகழ்த்தினர்.

இங்கு உரை நிகழ்த்திய அல்ஹாஜ் முஸ்னி உவைஸ் கூறியதாவது

சாதுலியா தரீக்கா வின் ஆன்மீக வழிமுறைகளை சீனன்கோட்டை மக்கள் தொன்று தொட்டு செவ்வனே பின்பற்றி வருகின்றனர்.

தரீக்காவின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்.

 

(பேருவளை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *