கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடையும், பரிசளிப்பு நிகழ்வும்
கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், பாடசாலையில் கற்று தரம் 5 புலமைப்பரிசில், சாதாரன தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு விருது கொடுத்து கௌரிக்கும் நிகழ்வும் நேற்று பாடசாலையில் இடம்பெற்றது.
பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் உதவி அதிபர் S.T.M. சுஹைப் மற்றும் சக ஆசிரியர்களின் முயற்சியினால், பாடசாலை அபிவிருத்தி குழு, பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மகளிர் அணி ஆகியோரின் ஒத்துழைப்புடன் அதிபர் W.B. சகீலா பிரதி அதிபர் M.A.C. வசந்தி ஆகியோரின் தலைமையில் பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் P.L.B .ஜோன்சி மற்றும் இடம் மாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களான ஆசிரியர் N. P. M. நவாஸ், ஆசிரியர் M.S.F. ஹிஸ்மியா, M.J. பஜ்ரியா பர்வின், ஆசிரியர் K.P.J. லாபிரா ஆகியோர்களுக்கான பிரியாவிடை நிகழ்வில் பொன்னாடை பேர்த்தப்பட்டு நினைச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வும் அன்றைய தினம் பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் இப் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றழம குறிப்பிடத்தக்கது.
(ரிஷ்வி ஹுசைன் – கல்பிட்டி)