உள்நாடு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலாயத்தின் உயர்ஸ்தானிகர் புத்தளம் முஹியத்தீன ஜும்ஆ பெரிய பள்ளிக்கு விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலாயத்தின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல பஹீம் அல்-அஸீஸ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புத்தளம் முஹியத்தீன ஜும்ஆ பெரிய பள்ளிக்கு வருகை தந்தார்.

பெரிய பள்ளியின் வரலாறு மற்றும் கட்டடக்கலை தொடர்பான அம்சங்களை பார்வையிட்டதோடு பெரிய பள்ளியின் விஷேட நம்பிக்கையாளர் சபையுடன் கலந்துரையாடல் ஒன்றையும் அவர் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் எண்ணிக்கையில் புத்தளம் மாணவர்களுக்கு விஷேட கவனம் செலுத்துமாறு வழங்கப்பட்ட வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும் பாகிஸ்தான் இலங்கைக்கான தூதுவராலயத்தின் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் மக்களுடனான உறவு தொடர்ந்தும் இருக்கும் என்ற விடயத்தையும் வலியுறுத்தினார்.

அத்துடன் 1968ஆம் ஆண்டு புத்தளம் நகரில் நிர்மாணிக்கப்பட்ட 1400 அல்-குர்ஆன் நினைவு கோபுரத்தையும் பார்வையிட்டார்.

குறித்த நினைவு கோபுரம் 1968ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி அப்போதைய சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகார முன்னாள் அமைச்சரான எஸ்.எம்.ஸபர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகும்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *