பூலாச்சேனை பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் உள்ளக இன்டர்லொக் பாதை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டிய அலி சப்ரி ரஹீம்
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் 2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் உள்ளக இன்டர்லொக் பாதை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 24.06.2024 அன்று கல்/பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முதலாவது அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
பாடசாலையின் அதிபர் மற்றும் அபிவிருத்திச் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் கலாம், நஜீம் உற்பட கிராமவாசிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நுரைச்சோலை அமைப்பளார் என்.எம். ஹஸீப், பிரத்தியேக செயலாளர் ஜவ்சி ஜமால்தீன் மற்றும் இணைப்பாளர் எச். அமீர் அலி (ஆசிரியர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த திட்டங்களுக்காக பூலாச்சேனை பாடசாலைக்கு ரூபா. 2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஊடகப்பிரிவு)