மருதானை அல் அமானாத் பாடசாலை ஏற்பாட்டில் மிருகக் கண்காட்சி.
பேருவலை மருதானை அல்-அமானத் சிறுவர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான மிருகக் கண்காட்சி அல்-அமானத் பாலர் பாடசாலையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இக் கண்காட்சியில் 50 க்கு மேற்பட்ட பறவைகள் மற்றும் மிருகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அல்-அமானத் பாலர் பாடசாலை பணிப்பாளர் தில்ஷாத் அன்வர் (முன்னால் நகர சபை உறுப்பினர்) மற்றும் அதிபர் பஸ்லா முர்ஸி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதம அதிதிகளாக பேருவலை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார மற்றும் பேருவலை முன்னால் நகராதிபதி மஸாஹிம் முகம்மது ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
டாக்டர் மஸாஹிர் முகம்மத் மற்றும் விஸ்டம் சர்வதேச பாடசாலை பணிப்பாளர் பவ்ஸர் ஹுஸைன் (நளீமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். மற்றும் விஸ்டம் சர்வதேச பாடசாலை அதிபர் திருமதி அனூஷா ராஜபக்ஷ , முன்னால் நகர சபை உறுப்பினர் பவ்ஸுல் அமீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் பாடசாலை சிறார்கள், பெற்றோர்கள்,பொதுமக்கள் என பலரும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியின் போது அல்-அமானத் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மரக் கன்றுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. இக் கண்காட்சி பற்றிய அதிதிகளின் கருத்துக்களும்,பாராட்டுக்களும் இங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
(பேருவளை பீ எம் முக்தார்)