சாதாரன தர விஞ்ஞான பாடத்தில் கம்பஹா வலயத்துக்கு முதலிடம்; அதிபர், ஆசிரியர்களுக்கு கெளரவம்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் கம்பஹா வலயம் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதையிட்டு பங்களிப்பு செய்த பாடசாலை ஆசிரியர்களுக்கு வலய கல்வி பணிமனையால் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.
க.பொ.த. (சா.த) 2022 (2023) பரீட்சையில் மேல் மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலயங்களில் விஞ்ஞானப் பாடத்தில் முதலாவது இடத்தை கம்பஹா கல்வி வலயம் பெற்றுக் கொண்டது.
இவ் அடைவை எய்து வதற்கு விஞ்ஞானப் பாடத்தில் 80% மேல் மாணவர்களைச் சித்தியடையச் செய்வதில் பங்களிப்புச் செய்த ஆசிரியர்கள் கடந்த 19/06/2024 அன்று வலயக் கல்விப் பணிமனையால் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் படி கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் இருந்து 94 சதவீத சித்திக்கான பங்களிப்பும், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்காவில் இருந்து 100 சதவீத பங்களிப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாக வலய கல்வி பணிமனையின் மதிப்பீட்டின்படி வெளியிடப்பட்டுள்ளது.
விஞ்ஞான பாடத்தில் 80வீத சித்தி அடைவுக்கு பங்களிப்பு செய்தவர்களை வலய கல்வி பணிமனையில் வைத்து கௌரவிக்கப்பட்டதுடன் குறித்த பாடசாலை அதிபர்களும் கௌரவிக்கப்ட்டமை சிறப்பம்சம் ஆகும்.
குறித்த சான்றிதழ்களை உரிய பாடசாலைகளில் அதிபர் ஊடாகவும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ் – கஹட்டோவிட்ட)