இலங்கையர்களின் கல்விக் கனவுகளை தொடர பாகிஸ்தான் உதவும்; – உயர் ஸ்தானிகர் பஹீம் உல் அஸீஸ்
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ், அவர்கள் 2024 ஜூன் 23 அன்று முஸ்லிம் ஹேண்ட்ஸ்-ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.
ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த உயர் ஸ்தானிகர், இலங்கையில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் கல்விக் கனவுகளைத் தொடர உதவுவதற்கு பாகிஸ்தான் முழுமையாக உதவும் என தெரிவித்தார். பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு, நாடளாவிய ரீதியில் தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. அல்லாமா இக்பால் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 480 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டதாரி, முதுகலை மற்றும் கலாநிதி துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர்.
உயர் ஸ்தானிகர் புத்தளத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் உள்ளூர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் , கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கணினிகள் ஆகியவற்றையும் வழங்கி வைத்தார். இறுதியாக உயர்ஸ்தானிகர் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.