உள்நாடு

புத்தளத்தில் உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை ஏற்பாடு செய்த உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையுடன் புத்தளம் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் (பெரியப்பள்ளி) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுமார் 55 உலமாக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு இரவு 8.30 மணிக்கு அஷ்ஷேக் ஸனூஸ் அஷ்ரபி அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் வரவேற்புரை மற்றும் தலைமை உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் முன்னால் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் மூலமாக உலமாக்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சில விடயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டம் தலைவர் அஷ்ஷேக் தமீம் ரஹ்மானி அவர்களால் ஜம்இய்யத்துல் உலமா சபையின் முக்கியத்துவம் பற்றி தெளிவுப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் உலமாக்களுக்களுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு பல கருத்துக்கள் சொல்லப்பட்டது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப தலைவர் அஷ்ஷேக் ஸவ்கி பஹ்ஜீ அவர்கள் நன்றி உரை 9.30 மணிக்கு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து உலமாக்களும் ஒருவருக்கு ஒருவர் முஸபஹா முஆனகா செய்து கப்பாரத்துல் மஜ்லிஸ் துஆவுடன் இனிதே முடிவடைந்தது.


அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *