உள்நாடு

திசைகாட்டியின் அரசியல் பற்றி கொள்கைரீதியான உரையாடல் இல்லாத குழுக்கள் குறைகூறல், பொய் கூறல் மற்றும் திரிபுபடுத்தலை மேற்கொண்டு வருகின்றன.- மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

தேர்தல் நெருங்கும்போது இதுவரை அதிகாரத்தில் இருந்த குழுக்கள் பலவிதமான பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களைப் போன்றே சேறுபூசுதல்களையும் விடுவித்து வருகின்றது. மறுபுறத்தில் மக்கள் மத்தியில் தேர்தல் நடாத்தப்படுமா என்ற ஐயப்பாடு உருவாக்கப்பட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட தேர்தலுக்கு அஞ்சிய அனைவரும் சனாதிபதி தேர்தலை தவிர்த்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் பொதுத்தேர்தலை நடாத்துங்கள், ரணிலுக்கு மேலும் இரண்டு வருடங்களை கொடுங்கள், அரசியலமைப்பின் வாசகங்களில் நுழைந்து செல்லுங்கள் என்றவகையில் பலவற்றை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் அவர்களின் தரப்பில் தேர்தலொன்றை தவிர்த்துச்செல்ல இவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச தேர்தலை தவிர்த்துச்செல்ல எந்தவிதமான வாய்ப்பும் இல்லையென்பதால் தேசிய மக்கள் சக்தி மீது குறைகூறி வருகிறார்கள். அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப்பெற்று அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ஷாக்களின் குழு சிதறிப்போயுள்ளது. சனாதிபதி தேர்தல் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கையில் அதில் போட்டியிடுவதா இல்லையா என்பதை திட்டவட்டமாக கூறமுடியாத அளவுக்கு அது சிதைந்துபோய் விட்டது. மொட்டின் ஒருசில தலைவர்கள் ரணிலுடன், மற்றுமொரு பிரிவினர் மகிந்தவுடன் இருக்கையில் மேலும் சில குழுக்கள் நாலாபக்கங்களிலும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ராஜபக்ஷாக்களின் பெரும்பாலானோர் ரணில் சரணம்நாட தூண்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மற்றுமொரு பிரிவினர் இறுதித் தருணத்தில் சிறிது பணத்தை தேடிக்கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க சனாதிபதி அதிகாரத்தைப் பிரயோகித்து பொதுப்பணத்தை செலவிட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பாகவும் தேர்தல் சட்டங்களுக்கு எதிராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் நிதியேற்பாடுகளை ஒதுக்கி மக்களுக்கு பத்து கிலோ அரிசியைக் கொண்டுத்துக் கொண்டிருக்கிறார். இத்தருணத்திலும் எமது நாட்டில் தேர்தல் சட்டங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உள்ளுரதிகார சபைத் தேர்தலுக்கு ஏற்புடைய நிலைமையே இருக்கின்றது. அதைப்போலவே கட்சியின் பெயர் ஐக்கிய மக்கள் சக்தியாக விளங்கியபோதிலும் எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாதென்பது திரு. பொன்சேகாவின் பாராளுமன்ற உரைமூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. பொருட்களை பங்கிடுவதற்காக கொமிஸ் பெறுகின்ற விதத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் சிலர் இரவிரவாக உரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஹர்ஷ த சில்வாவை உள்ளிட்ட பலம்பொருந்திய பொருளாதார குழுவொன்று இருப்பதாகக் கூறினாலும் சஜித் பிரேமதாச பொருளாதார ஆலோசகர்களை நியமித்துக் கொண்டுள்ளார். சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷாக்களால் மக்களின் ஆதரவினை சேரத்துக்’கொளள் முடியாதிருப்பதோடு தேசிய மக்கள் சக்தி நாட்டுக்குள் போன்றே சர்வதேசரீதியாகவும் பாரிய ஒத்துழைப்பினைப் பெற்று முன்நோக்கி நகர்கின்றது. அனைத்து சக்திகளும் திசைகாட்டியுடன் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிச் செல்கின்றவேளையில் ராஜபக்ஷ, ரணில், சஜித் அனைவரும் கூட்டாக தேசிய மக்கள் சக்தியை குறிவைத்து அசிங்கமான சேறுபூசுதல்களையும் திரிபுபடுத்தல் இயக்கமொன்றையும் முன்னெடுத்து வருகிறார்கள்.

அவதூறாக பேசினாலும் சேறு பூசினாலும் பதலளிப்பது இலகுவானதாக அமைந்தாலும் திரிபுபடுத்துதலை பாரதூரமான மட்டத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். 76 வருடங்களாக தம்மை துன்புறுத்திய முறைமைக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை தடுப்பதற்காக அவதூறுகள், சேறுபூசுதல் மற்றும் உண்மையைத் திரிபுபடுத்துதல் என்பவற்றை முழுமையாக தோற்கடிக்க மக்கள் புரிந்துணர்வுடன் அணிதிரள வேண்டும். திசைகாட்டிக்கும் ரணிலுக்கும் இடையில் ஒரு டீல் இருப்பதாக பொய்ப்பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்கள். ரணிலுடன் டீல்போட்டு காப்பாற்றிக்கொள்ள எமக்கு என்ன இருக்கிறது? திசைகாட்டி வெற்றிபெறும் என்பதற்காகவே உள்ளுரதிகார சபைகள் தேர்தல் பிற்போடப்பட்டது.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலைக்கூட பிற்போட்டு எமது பயணத்தை தடுக்க முயற்சி செய்கிறார்கள். எனினும் உண்மையான டீல் ராஜபக்ஷாக்களுக்கும் ரணிலுக்கும் இடையிலேயே நிலவுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ரணிலுடன் பேச்சுவாரத்தைகளை நடாத்துகிறார்கள். இரவில் ரணிலுடன் எதிர்கால அரசியல் பற்றித் திட்டமிடுகின்ற இவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து திசைகாட்டிக்கு ரணிலுடன் டீல் இருப்பதாக கூறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் பலம்பொருந்தியவர்கள் 19 பேர் ஏற்கெனவே ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பன்முகப்படுத்திய நிதிகளைப் பெற்றுள்ளார்கள். எமது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வழங்காத பன்முகப்படுத்திய நிதியை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளார்கள். அதுமாத்திரமல்ல வயின் ஸ்டோர்ஸ் உரிமங்கள் போன்றே பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர்கள் எல்லோருமே ஒன்றாக இருந்துகொண்டு தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுத்துநிறுத்த அசுத்தமான கூட்டமைப்பினைக் கட்டியெழுப்பி தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தாக்குதல் நடாத்துகிறார்கள். திசைகாட்டி பெறுகின்ற வெற்றி காரணமாக பகிரங்கமாகவே பொய்கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி வெற்றிகரமான ஒரு வேலையைச்செய்தால் அதனைக் காப்பியடிக்க முயற்சி செய்கிறார்கள். முடியாமல்போனால் சேறு பூச தொடங்குகிறார்கள். தோழர் அநுரவின் வெற்றிகரமான லண்டன் பயணம் சம்பந்தமாக படைக்குந்திறன்மிக்க பிரச்சார நிகழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. டபள் டெக்கர் பஸ், கட்டிடங்களை பயன்படுத்தி படைப்பாற்றல்மிக்கதாக செய்யப்பட்டிருந்த பிரச்சார வேலைகளுக்கு பணம் எங்கிருந்து என்று அவர்கள் பதற்றமடைந்திருந்தார்கள். அந்த நாட்டின் பஸ்களில் அதுபோன்ற பிரச்சார அலுவல்களை மேற்கொள்ள முடியாதெனக்கூட அறிந்திராதவர்கள்தான் அதிகாரத்தை வேண்டிநிற்கிறார்கள். மேதினத்தை நடாத்த டிக்கெற் அச்சிட்டு பணம் தேடிக்கொண்டதாக மகிந்தானந்த அழுத்கமகே பாராளுமன்றத்தில் கூறினார்.

மே தினத்திற்கான செலவுகளை ஈடுசெய்துகொள்ள மக்களிடமிருந்து பணத்தை சேகரிப்பதற்கான டிக்கெற்றுகளை நாங்கள் அச்சிடுவது 1978 இல் இருந்தாகும். மற்றுமொரு பிரச்சாரத்தைக் கொண்டுசென்றார்கள் கணடாவில் கூட்டங்களுக்கு சோற்றுப்பொதிகளைக்கொடுத்து வரவழைத்துக்கொண்டதாக. எமது வெளிநாடு சென்றுள்ள தோழர்கள் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக கூட்டாக பல்வேறு பொருளாதார வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கின்ற எமது தோழர்கள் இலங்கையின் உணவுவகைகளை தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக தேரத்தல் நிதியைத்தை பலப்படுத்திக்கொள்வது அவர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டமாகும். கணடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாடுகளில் எமது தோழர்கள் புரிகின்ற வேலைகள் பற்றி அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. எமது அரசியல் சம்பந்தமாக கொள்கைசார் உரையாடலொன்றுகூட இல்லாமல் அவர்கள் குறைகூறல், பொய்புனைதல் மற்றும் திரிபுபடுத்துதலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் செயற்பாடுகளைப் பார்த்தால் எமக்கு உண்மையாகவே கவலையாக இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து தனியார் ஆதனங்களை கையகப்படுத்திக் கொள்வதாகவும் பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வந்தார்கள். உண்மையாகவே நாங்கள் செய்வது எமது உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதையாகும். இன்றளவில் ஆதனங்கள் இல்லாதவர்களும் வாழக்கூடியவகையில் ஆதனமுள்ளவர்களாக மாற்றியமைப்பதாகும். “சரதியலின்” செயற்பாங்கு எமது கொள்கையல்ல. உண்மையாகக் கூறப்போனால் அவர்களே ஆதனங்களை இழக்கச் செய்விக்கிறார்கள். இலட்சக்கணக்கான கைத்தொழில்கள் மூடப்பட்டுவிட்டன, ஆதனங்கள் வங்கிகளுக்கு சொந்தமாகி விட்டன, தாங்கிக்கொள்ள முடியாத வரிச்சுமை சுமத்தப்பட்டு தற்போது புதிதாக ஆதன வரியொன்றையும் விதித்துள்ளார்கள்.

அவ்வாறு செய்துகொண்டும் அவர்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகவும் திசைகாட்டி ஆதனங்களை கையகப்படுத்திக் கொள்வதாகவும் இன்னமும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாட்டை நாசமாக்கி, மக்களை பிச்சையேந்த வைத்து, அவர்கள் வந்ததும் நாட்டைக் கட்டியெழுப்புவதாக இன்னமும் கூறுகிறார்கள். குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தலைவர்களை குறிவைத்து கீழ்த்தரமான சேறுபூசுகின்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு ஒன்றுமே கிடையாதென்பதால் கடந்தகாலத்தில் ஐ.ம.ச. குழுவொன்று தோழர் ஹந்துன்னெத்தியை குறிவைத்து விசேட தாக்குலொன்றை நடாத்தியது. மத்திய வங்கி மோசடியை அவர்கள் மூடிமறைக்க முற்பட்டவேளையில் அதற்க இடமளிக்காமல் கோப் குழுவின் தவிசாளர் என்றவகையில் தோழர் ஹந்துன்னெத்தி செயலாற்றினார்.

தற்போது ஐ.ம.ச. இல் இருக்கின்ற அப்போது யு.என்.பி.இல் இருந்த பலர் கோப் குழு அறிக்கைக்கு “புஃட் நோற்” போட்டு ரணிலைப் பாதுகாக்க முயற்சி செய்தவர்களாவர். தோழர் ஹந்துன் சம்பந்தமாக அவர்களுக்கு பழைய பகையும் இருக்கின்றது. நாங்கள் உங்கள் அனைவருக்கும் வலியுறுத்துவது ” ஐயாமார்களே உங்களின் கட்சிகளைப்போலல்ல தேசிய மக்கள் சக்தி. எமது எவரையும் தனிக்கவிட்டு தாக்குதல் நடாத்தி வீழ்த்த முடியாது. நாங்கள் அனைத்திற்கும் கூட்டாக முகங்கொடுப்போம்.” என்று. எந்தவொரு சவாலையும் கூட்டாக எதிர்கொண்டு வெற்றிகொள்ளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கிறது.

குறிப்பாக தோழர் ஹந்துன்னெத்தி இற்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் “நெத் எஃப் எம்” கலந்துரையாடலில் அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற பொருளாதார செயற்பாடுகள் பற்றி விபரித்த ஒரு விடயத்தை துண்டுகளாக வெட்டிஎடுத்து வகுத்துதொகுத்து செய்தியொன்றை புனைந்துள்ளார்கள். முதலில் லேக்ஹவுஸ் செய்தித்தாள்களில் இதனைப் பிரசுரிக்க விரும்பவில்லை. பின்னர் தேசிய ரூபவாஹிணியில் திரிபுத்தப்பட்ட அந்த செய்தியை ஒளிபரப்பிய பின்னர் திணமின செய்தித்தாளில் பிரசுரித்தார்கள். காலையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அந்த செய்தியை மேற்கோள் காட்டினார்கள்.

சனாதிபதியிடம் இருக்கின்றவர்கள் இந்த செய்தியை திரிபுபடுத்தி உள்ளார்கள். ஒரு சட்டப் பிரச்சினை நிலவுவதாலேயே அதனை லேக்ஹவுஸ் பிரசுரிக்கத் தயங்கியது. நாங்கள் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதைப்போலவே “எம்மால் பொருளாதாரத்தை சீராக்க முடியாது” என தோழர் ஹந்துன்னெத்தி கூறியதாக பிரச்சாரம் செய்துள்ளார்கள். அது ஒரு திரிபுபடுத்தலாகும். எமது ஆட்சியில் ஒரே இரவில் பொருளாதாரத்தை சீராக்க முடியாது எனக்கூறியதை வெட்டி இவ்வாறு பிரச்சாரம் செய்துள்ளார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வெட்டிஎடுத்து திரிபுபடுத்திய செய்திகளின் மூல நிகழ்ச்சியை ஆராய்ந்து பாரக்குமாறு நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். முழுக் கதையையும் கேளுங்கள். அப்போது உண்மையை உணரலாம்.

தோழர் லால்காந்த சம்பந்தமாகவும் அவ்வாறான திரிபுபடுத்தலை செய்தார்கள். “ஒருசிலர் கூறுகிறார்கள் நாங்கள் வந்தால் தொழில்முயற்சிகளை கையகப்படுத்துவோம் என”. அந்த தலைப்பை திரிபுபடுத்தி “ஒரு சிலர் கூறுகிறார்கள்” எனும் பகுதியையும் “என” என்கின்ற பகுதியையும் வெட்டிவிட்டு “நாங்கள் வந்தால் தொழில்முயற்சிகளை கையகப்படுத்துவோம்” எனும் வாக்கியப் பகுதியை போடுகிறார்கள். இந்த அசிங்கமான, கீழ்த்தரமான, அருவருப்பான வேலையையே தற்போது செய்துவருகின்றனர். அவர்களால் அதைத்தவிர வேறு ஒன்றையுமே செய்ய முடியாது.

இந்த விளையாட்டு மூலமாக திசைகாட்டியின் பயணத்தை நிறுத்திவிட முடியாது. தமது தோல்வியால் வெறிபிடித்துள்ளவர்கள் முன்னெடுத்து வருகின்ற திரிபுபடுத்துதல் சம்பந்தமாக நாங்கள் அவதானத்துடன் இருந்து எமது உத்தியோகபூர்வ ஊடகங்கள் வாயிலாகவும் எம்மிடமிருந்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் அவ்விதமாக கீழ்த்தரமாக நடந்துகொள்ளவேண்டாமென எதிரிகளை வலியுறுத்துகிறோம். சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய இடங்களில் அதனைச் செய்வோம். தேவையான இடங்களில் மாத்திரம் தெளிவுபடுத்துவோம். பொருட்படுத்தாமல் விடக்கூடிய இடங்களில் பொருட்படுத்தாமல் விடுவோம். மக்களின் நம்பிக்கையுடன் பரிசுத்தமான நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக உழைப்போம்.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் பங்கேற்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *