விளையாட்டு

சதன் வேரியஸ் சம்பியன் கிண்ணம் கல்பிட்டி ரஹ்மானியா அரபுக் கல்லூரியின் அல் பதாஹ் அணி வசம்

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நேற்று 2024.06.23 ஞாயிற்றுக்கிழமை மாத்தறை உயன்வத்த மைதானத்தில் மாத்தறை சதன் வோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை உலமாக்கல் கிரிக்கெட் தொடரில் கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் அல்பதாஹ் அணி சம்பியன் மகுடத்தை வெற்றி கொண்டு அசத்தியது.

நாடலாவிய ரீதியில் அதி சிறந்த 24 உலமாக்களைக் கொண்ட அணிகள் பங்குபற்றி, மிக பிரமாண்டமாக நடைபெற்ற உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் அல்பதாஹ் அணி தாம் விளையாடிய 06 போட்டிகளிலும் தொடராக வெற்றி பெற்றுஇ இறுதிப் போட்டியில் பலம் பொருந்திய மாத்தறை கிறீன் ஸ்டார் அணியையும் வீழ்த்தி நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தையும் ஒரு லட்சம் ரூபா பரிசுத் தொகையையும் தனதாக்கி கல்பிட்டி மண்ணிற்கும், ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *