பொலன்னறுவையிலுள்ள வைல்லைப் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்..! ஹிஸ்புல்லாவின் கோரிக்கைக்கு கிடைத்த பலன்..!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை மட்டக்களப்பில் இடம் பெற்றது.
பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் 600 ஏக்கர் வயல் காணிகளை
“வைல்லைப்” வன ஜீவராசிகளுக்காக அரசாங்கம் சுவீகரித்தது.
மிக நீண்ட கால பிரச்சினையாக நிலவி வரும் முஸ்லிம்களின் “வைல்லைப்” வன ஜீவராசிகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளை இது வரை விடுவிக்காமலும், எவ்வித நஷ்டஈடுகளும் கொடுக்கப்படாத நிலையில் அம்மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
பொலன்னறுவையை சேர்ந்த புத்திஜீவிகளும் உலமாக்கலும் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்விடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்
விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்று மிக விரைவில் அக்காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிக விரைவில் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தாம் பணிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
(எம்.எஸ்.எம். சஜீ – ஊடகப் பிரிவு)