பேருவலை சீனங் கோட்டை ஸாலி ஹாஜியார் மாவத்தை யன்ங் பிரதர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சிகள்
பேருவலை சீனங் கோட்டை ஸாலி ஹாஜியார் மாவத்தை யன்ங் பிரதர்ஸ் விளையாட்டுக் கழகம் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 35ஆவது வருடமாக ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சிகள் 17, 18 ஆகிய தினங்களில் ஸாலி ஹாஜியார் மாவத்தையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்த மாபெரும் விளையாட்டு போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட போட்டிகள் ஆண், பெண்களுக்கு வெவ்வேறாக இடம்பெற்றதோடு இப்போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றினர். விசேட கலைநிகழ்ச்சிகளாக சமூக நாடகம் மற்றும் முஸ்லிம்களது பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் களிகம்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றன. அத்தோடு சிறார்களின் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும் மரதன் ஓட்டம், முட்டி உடைத்தல், சங்கீதக் கதிரை, பலூன் ஊதல், செங்கல் ஓட்டம், சூப்பியால் குளிர்பானம் அருந்தல், மாயா மனிதன், தேசிக்காயுடன் ஓடல், முட்டை பொத்தல் போன்ற சுவாரஷ்யமான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. யன்ங் பிரதர்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் சமாதான நீதவான் அல்-ஹாஜ் ஏ.டப்ளியு.எம். அன்ஸார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஊரின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். இவ்வனைத்து நிகழ்ச்சிகளையும் ஸாலி ஹாஜியார் மாவத்தை இளைஞர்கள் முன்னின்று ஒற்றுமையோடு நடத்தியமை விசேட அம்சமாகும்.
(பேருவலை பீ எம் முக்தார்)