ஹஸன் ஸலாமாவுக்கு கஹட்டோவிட்டவில் வரவேற்பு
45 கி.மீ. பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த பஹ்மி ஹஸன் ஸலாமா அவர்களுக்கு கஹட்டோவிட்டாவில் வரவேற்பும் கௌரவிப்பும் நேற்று (23) நடைபெற்றது.
இவர் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பாக்கு நீரிணையை சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தை 12 மணியளவில் நீச்சலடித்து சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்டாவிலுள்ள அவரது நெருங்கிய உறவினர்களது அழைப்பின் பேரில் இன்றைய தினம் ஊருக்கு வருகை தந்த போதே ஹம்தி ஸலாமாவுக்கு கஹட்டோவிட்டாவிலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் ஊர் வாலிபர்கள் மற்றும் ஊர் மக்கள் வரவேற்பளித்து கௌரவிக்கப்பட்டார்.
முன்னால் தேர்தல் ஆணையாளரும் தற்போதைய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினருமாகிய எம் எம் மொஹம்மத் அவர்களின் ஆரம்ப வரவேற்பையடுத்து கஹட்டோவிட்ட JF அணி சார்பில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் ரோசான் அவர்களால் கிண்ணம் ஒன்று வழங்கி கௌரவித்ததுடன், கஹட்டோவிட்ட HF விளையாட்டு கழகம் சார்பிலும் நினைவு சின்னம் ஒன்றை அக்கழகம் சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சம் ஆகும்.
45 km தூரத்தை 12 மணி நேரம் நீந்தி சாதனை படைத்த சகோதரர் ஹஸன் ஸலாமா மென்மேலும் உலகளாவிய ரீதியில் சாதனைகள் பல படைத்திட வாழ்த்துக்கள்.
(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்- கஹட்டோவிட்ட)