உள்நாடு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு காற்று மெத்தை (Air Mattress) உட்பட சில பொருட்கள் வழங்கிவைப்பு..!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய தேவையாக இருந்த காற்று மெத்தை (Air Mattress) தொடர்பான கோரிக்கையினை வைத்தியசாலை அதிகாரிகள் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களிடம் முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில்   நேரடியாக வைத்தியசாலைக்கு விஜயம் செய்த  பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டாக்டர் பீ..பிரபா அவர்களிடம் Air Mattress உடன் வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த இன்னும் சில பொருட்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதிநிதிகள்  உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *