உள்நாடு

பட்டிருப்பு தேசிய பாடசாலை தேசிய பொலிஸ் கடேற் மாணவர் சிப்பாய் படையணிக்கு GUN PARADE  பயிற்சி..!

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடி  தேசிய பொலிஸ்  கடேற் மாணவ சிப்பாய் படையணிக்கு GUN PARADE பயிற்சி அண்மையில் (18) வழங்கப்பட்டது

இப்பயிற்சிகளை மட்டக்களப்பு தேசிய பொலிஸ் கடேற் மாணவர் சிப்பாய் படையணியின் இணைப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கிளெஸ்ரன் , பயிற்றுவிப்பாளர் அருண், 38ம் படையணியின்   பயிற்சி அதிகாரி வினோசாந் ஆகியோர் இணைந்து GUN PARADE பயிற்சிகளை வழங்கினார்கள்
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை முதல்வர் எம்.சபேஸ்குமார்  அவர்களின் வழிகாட்டலிலும் பாடசாலையின் கடேற் பயிற்றுவிப்பாளர் எஸ்.முகுந்தன் அவர்களது நெறிப்படுத்தலிலும் ,பிரதி முதல்வர் த.ஜனேந்திரராஜா  அவர்களது பங்களிப்புடனும் சிறப்பாக நடைபெற்றது.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *