“கல்விக்காக கை கொடுப்போம்” மகத்தான கல்வி செயற்திட்டம் ஆரம்பம்
பேருவளை , மருதானை களு/அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் களு/அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் ,சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச மேலதிக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பாடசாலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு இணங்க, சமூக சேவையாளரும், ரூமி ஹாசிம் பவுண்டேசன் ஸ்தாபகரும் ,இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபன முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் டொக்டர் ரூமி ஹாசிம் அவர்களின் அனுசரணையில் நடத்தப்படவுள்ள இம்மேலதிக வகுப்புக்களின் கன்னி விழா , எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (23) நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு கல்வித் திட்டமானது பாடசாலை நிர்வாகம் , பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுபேருவளை , மருதானை களு அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய , கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதோடு, கல்வி நலன் விரும்பிகள்,பெற்றோர்கள் ,பழைய மாணவ மாணவிகள் மற்றும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சர்வ மறுமலர்ச்சிகளிலும் பெயர்பெற்ற பேருவளை சமூகத்தின், கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டுள்ள , இக்கல்வித்திட்ட ஏற்பாட்டுக்குழுவான களு அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திற்கு (OBA)பாடசாலை நிர்வாகம் மற்றும் பேருவளை மருதானைச் சமூகம் நன்றி தெரிவிக்கின்றனர்.
(பேருவளை :பீ.எம் முக்தார்)