உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பாநெறி தெரிவு வழிகாட்டல் செயலமர்வு

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை மற்றும் புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு ஒண்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான பாடநெறி தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல் செயலமர்வானது நேற்று (20) வியாழக்கிழமை கே.எ.பாயிஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிக்கு சுய பிரார்த்தனைவுடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு தலைவர்
M.R. Sawwaf Rafayis அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் Ash-Sheikh M. B. M. Jifnas (Al-Misbahi) அவர்களால் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சில விடயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டன.

மேலும் S. A. M. Farraj (Islahil) Skills Development Officer Divisional Secretariat Puttalam அவர்களால் பல்கலைக்கழகம் செல்வதின் முக்கியத்துவம் பற்றி சில விடயங்கள் ஆராயப்பட்டன.

அதனை தொடர்ந்து Prof. Vasthiyampillan Sivalogathasan (Professor in Management Studies Faculty of Management Studies at Open University in Sri Lanka) பல்கலைக்கழகத்தின் பாடநெறிகள் பற்றி பல விடயங்கள் நினைவுப்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு உறுப்பினர்களால் எவ்வாறு பல்கலைக்கழகம் தெரிவு செய்வது பாடநெறிகள் தெரிவு செய்வது என்ற தலைப்பில் பல விடயங்கள் விளக்கப்படுத்தப்பட்டன. கல்வி சம்பந்தமான உபக்குழு அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி அஷ்ஷேக் மில்ஹான் நளீமி.

அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *