உலகம்

கடுமையான வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரையின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிப்பு..!

இந்த வருடம் ஹஜ் யாத்திரையின்போது கடுமையான வெப்பம் தொடர்பான பிரச்சினைகளால் உயிரிழந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாக, அரபு நாடுகளின் இராஜதந்திரிகள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 68 இந்தியர்களும், 528 எகிப்தியர்களும், 60 ஜோர்தானியர்களும் அடங்குவதாக, இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்..
இதேவேளை, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள், வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும்,சவூதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹஜ் யாத்திரிகர்கள், பகல் வேளைகளில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதன் காரணமாகவே, அதிகளவானோர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சவூதி அரேபிய அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *