யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஜின்னா மைதானத்தில் பெருநாள் தொழுகை..!
யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் காலை 6.30 மணியளவில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய பெருநாள் தொழுகையானது மர்யம் மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) அவர்கள் பெருநாள் தொழுகையை நடாத்தியிருந்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்தும், நபி இப்ராஹீம் அலை அவர்களின் வாழ்வின் தியாகங்கள், அவரின் வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகளை கருப்பொருளாகக் கொண்;டு பெருநாள் விசேட உரையும் நிகழ்த்தியிருந்தார்.
பெருநாள் தொழுகைக்காக ஜின்னா மைதான திடலில் இன்று ஆண்கள், உலமாக்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்)