உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமத்தின் ஓராண்டு பூர்த்தியும் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும்..!

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும், புனித ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் வைபவமும் மற்றும் மூத்த சமூக சேவையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும் 18 ஆம் திகதி (18-6-2024) பேருவளை அக்கர தஹ அட்ட (இரப்பர் தோட்ட வரவேற்பு மண்டபத்தில்) குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிம் தலைமையில் நடைபெற்றது.

சீனன் கோட்டை ஸக்காத் கமிட்டித் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான ஏ.ஐ.எம் பாக்கிர் ஹாஜியார்,சீனன் கோட்டை முத்துக்கள் குழுமத்தின் மூத்த உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஜே.எம்.எம் முஹம்மத் ஸாலி ஹாஜியார் (மொம்ம ஸாலி ஹாஜியார்) ஆகிய இருவருமே நிகழ்வில் கெளரவிக்கப் பட்டவர்கள் ஆவர்.

நிகழ்வில் இந்த இரு சமூக சேவையாளர்களின் பணிகளைக் குழுமத் தலைவர் ராமிஸ் நாஸிம்,மற்றும் அஸ்வர் வபா ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

நிகழ்வில் பிரபல சமூக சேவையாளர்களான எம்.எப்.எம் ஹாரூன் ஹாஜியார்,ஸலீம் ஹாஜியார்,ரிஸ்வி ஹாஜியார் உட்பட குழுமத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முழு நாள் நிகழ்வாக இடம் பெற்ற நிகழ்வில் குழும உறுப்பினர்களின் பல்வேறு கலை,கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ள திட்டங்கள் குறித்து இந்த ஒன்று கூடலில் ஆராயப் பட்டது.

பிரதேசத்தில் உள்ள வறிய பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை இடையூறின்றி தொடர கற்றல் உபகரணம் வழங்கள்,தரம் 5 புலமைப்பரேசில் பரீட்சைக்கும்,க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றிய மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்குகளையும் நடாத்தியதோடு பல சமூக,கல்வி,பொதுப் பணிகளையும் இந்த வட்சப் குழுமம் செய்துள்ளமை குறைப்பிடத் தக்க அம்சமாகும்.குழுமத்தில் உள்ள உறுப்பினர்கள் பரோபகாரிகளின் பங்களிப்பு இதில் முக்கியமானது.இந் நிகழ்வில் உறுப்பினர்களுக்கான அடையாள் அட்டைகளும் வழங்கி வைக்கப் பட்டன.

இந்த வருடம் புனித ரமழான் மாதம் இப்தார் நிகழ்வொன்றையும் பலஸ்தீன மக்களுக்கான துஆப் பிரார்த்தனையையும் இந்த வட்சப் குழுமம் நடாத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *