25 இலட்சம் ரூபா செலவில் கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்பு..!
25 இலட்சம் ரூபா செலவில் கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடிடத் தொகுதி திறப்பு விழா ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியை தலைமையில் இடம்பெற்றது.
சுமார் 80 வருடம் பழையமை வாய்ந்த கட்டிடத்தின் கூரையினை பாடசாலையின் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சின் அனுமதியுடன் இப்பாடசாலையின் பெற்றோர்களினால் மீளவும் திருத்தியமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதியினை இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அதிபர் நதீரா இஸ்மாயில் உத்தியோகபூர்வமாக திறந்து மாணவிகளின் பயன்பாட்டுக்காக கையளித்தார்.
இதில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார். பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் ஹஸன் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பழைய மாணவிகள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையிலான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)