கற்பிட்டியில் முதன் முறையாக ஹஜ் பெருநாள் சிறப்பு கவி அரங்கம்
கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் முதல் நிகழ்வாக ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக இடம்பெற உள்ள கவி அரங்கம் சரித்திரம் கண்ட தியாகத் திருநாள் என்ற தலைப்பில் கற்பிட்டியின் மூத்த கவிஞர்கள் மற்றும் இளம் கவிஞர்கள், கவிதானிகள் என எட்டு பேர் கலந்து கொண்டு தமது கவி ஆற்றல்களை எதிர் வரும் வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 3 மணிக்கு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தம்பி நெய்னா மரைக்கார் கேட்போர் கூடத்தில் வெளிப்படுத்த உள்ளனர் .
இலங்கையின் தேசிய நாளிதழான தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் ஊடக அணுசரணையில் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும் தில்லையூர் பாடசாலையின் அதிபருமான எஸ் எம் அருஸ் தலைமையில் இடம்பெற உள்ள இக் கவி அரங்கில் மூத்த சுதந்திர ஊடகவியலாளரும், எழுத்தாளரும், கவிஞருமான எம்.ஏ.எம் நிலாம் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)