உள்நாடு

கோறளைப்பற்று மத்தி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பிரத்தியோக சிகிச்சை நிலையம் ஆளுனர் திறந்து வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பிரத்தியோக சிகிச்சை நிலையம் 15.06.2024 சனிக்கிழமை அன்று மாலை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானினால் திறந்து வைக்கப்பட்டது.

ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி ஏ.நளீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் பணிப்பாளர் டாக்டர் திருமதி ஜே.பாஸ்கரன், ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், ஐ.எஸ்.ஆர்.சி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இணைப்பாளர் ஏ.எல்.ஜூனைட் நளீமி,  கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குவைத் நாட்டின் ‘குவைத் இஸ் பை யுவர்சைட்’; மற்றும் ‘ஷேக் அப்துல்லாஹ் நூரி செரட்டி அமைப்பின் நிதியளிப்பில் ஐ.எஸ்.ஆர்.சி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பங்களிப்புடன் ஐம்பது லட்சம் ரூபா நிதியளிப்பில் கட்டப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் பிரத்தியோக சிகிச்சை நிலையம் மற்றும் அதற்கான தளபாடங்களும் கையளிக்கப்பட்டன.

இங்கு வருகை தந்த பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்ட ஆளுனர் அவர்களது பிரச்சனைகள் தொடர்பான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வினை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டதுடன் அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

 

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *