உள்நாடு

மாரடைப்பால் காலமான அக்கரைப்பற்று ஹாஜி!

ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்பவர் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

இவருடைய மரணம் மக்கா கிங் அப்துல் அஸீஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

அறஃபா,முஸ்தலிஃபா மற்றும் மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கிரியைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா தங்குமிடம் திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *