உள்நாடு

சாலைக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சாரதி அனுமதிபத்திரங்களில் சாரதிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறையொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – போக்குவரத்து பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன

சாலை வீதிகளின் கட்டுப்பாடுகளை மீறுதல்,  சாலைகளின் சந்திகளிலுள்ள போக்குவரத்து விளக்கு அடையாளங்களை பின்பற்றாது வாகனங்களைச் செலுத்துதல் , குறிப்பிட்ட வாகன சிறப்பிடங்களைப் தவிர்த்து வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உட்பட போலி இலக்கத் தகடுகளுடன் வாகனங்களை செலுத்துதல் ஆகிய சம்பவங்கள் சீசீடீவி மூலமாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் 4500 பேர் கைது செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

இவற்றைக் கட்டுப்படுத்தும்வகையில் சாரதிகளுக்கு சாரதி அனுமதிபத்திரங்களில் மதிப்பெண்கள் வழங்கும் முறையொன்றை நடைமுறைப்படுத்தவிருப்பதாக போக்குவரத்து பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்திருப்பதாகவும் அறிய முடிகிறது
அந்தவகையில் சாரதி அனுமதி பத்திரங்களில் 24  மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன்பின் சாரதிகளின் வாகன விபத்து    ,குடிபோதை ,  வேகம் , உட்பட போக்குவர்த்து ஒழுங்குமுறைகளை மீறும் சம்பவங்களைவைத்து  சாரதிகளின் மதிப்பெண்கள் குற்றங்களுக்கேற்ப குறைக்கப்படும் பட்சத்தில் அவர்களது சாரதி அனுமதி பத்திரங்கள் இரண்டு வருடங்களுக்கு ரத்து செய்யப்படும்  அவ்வாறு அனுமதி பத்திரம்  ரத்துசெய்யப்படும் சாரதிகள் மீண்டும் தமக்கான அனுமதி பத்திரத்துக்காக மீண்டும் விண்ணப்பித்து  பரீட்சையெழுதவேண்டும் எனத் தெரிவிக்கபட்டுள்ளதுடன் வாகனமோட்டும்  சாரதிக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பற்றியும் அவதானம் செலுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *