குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 75 வது ஆண்டை ஒட்டி சித்திரப் போட்டி
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 75 வது ஆண்டை ஒட்டி, நாடளாவிய மட்டத்தில் நடாத்தப்படும் சித்திரப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஜுலை 30ஆம் திகதி கொண்டாடப்படும் ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கல்வவி அமைச்சின் அனுமதியோடு , கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கட்புல கலைகள் பீடத்தின் ஆலோசனையின் பேரில் , சேவ் பவுண்டேசன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச ரீதியில் வியாபித்துள்ள குற்றச் செயலொன்றாகக் கருதப்படும் மனித வியாபாரம் தொடர்பில் பொது மக்களை அறிவூட்டும் நோக்கில் நாடளாவிய மட்டத்தில் நடத்தப்படும் ”சித்திரப் போட்டி”
இப் போட்டி நிகழ்ச்சி 3 பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. அதில் 1ஆவது பிரிவு தரம் 10 மற்றும் 11 பாடசாலை மாணவர்களுக்கானது. அடுத்து பிரிவு 2 தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்கானது. பிரிவு 3 பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கானது.
மேலும் இப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள சகல ஆக்கங்களும் ஏ3 அளவிலான திடமான தாளில் வரையப்பட்ட சித்திரங்களாக இருத்தல் வேண்டும். இப் போட்டியின் தலைப்பாக ” மனித வியாபாரத்திற்கு ஆளாகாமல்’ எனும் கருவில் சித்திரங்கள் வரையப்படல் வேண்டும். இப் போட்டி நிகழ்ச்சியின் இறுதித் திகதி யாக இம்மாதம் 30ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.