இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை இலங்கை வருகிறார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதே அவரது விஜயத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரை நாளை சந்திக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும்,
மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது.