விளையாட்டு

முன்னனி அணிகள் வெளியேறியிருக்க நாளை சுப்பர் 8 சுற்று ஆரம்பம்.

9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது சுற்றான சுப்பர் 8 சுற்றுக்கு 4 குழுக்களிலும் இருந்து முதல் இரு இடங்களைப் பிடித்த 8 அணிகள் தகுதி பெற்றிருக்க முன்னனி அணிகளான இலங்கை இ பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில் கடந்த 2ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் 9ஆவது உலகக்கிண்ணத் தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்றிருந்தன. அவை 5 அணிகள் வீதம் 4 குழுக்கலாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இடம்பெற்றன. இதில் இரு குழுக்களுக்கு அமெரிக்காவிலும், இரு குழுக்களுக்கு மேற்கிந்தியத் தீவுகளிலும் இடம்பெற்றன.

அதற்கமைய குழு நிலையில் ஒரு அணி மற்றைய 4 அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் போட்டியிட்டு அதில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் இடண்டாம் சுற்றான சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். அதற்கமைய இன்றைய தினத்துடன் முதல் சுற்றான லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்திருந்தது. இருப்பினும் கடந்த 3 தினங்களுக்கு முன்பே சுப்பர் 8 அணிகள் தெரிவாகியிருந்தன.

அதனால் குழு ஏ இல் இடம்பிடித்த கடந்த முறை இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்த பாகிஸ்தான் அணி கத்துக் குட்டி அணியான அமெரிக்கா மற்றும் பரம வைரியான இந்தியா ஆகிய இரண்டு அணிகளுடனும் தோற்றமையால் சுப்பர் 8 வாய்ப்பை இழந்து ரி20 உலகக்கிண்ண வரலாற்றில் முதன் முறையாக முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.

அதே போல் குழு டீ இல் இடம்பிடித்திருந்த இலங்கை அணி தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் தோற்று, நேபாள அணியுடனான போட்டி மழையால் இடம்பெறாமல் போக ஒரே ஒரு வெற்றி மற்றும் போட்டி இடம்பெறாமையால் கிடைக்கப்பெற்ற ஒரு புள்ளி ஆகியவற்றுடன் மொத்தமாக 3 புள்ளிகளுடன் வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

மேலும் சீ இல் இடம்பெற்ற நியூஸிலாந்து அணி ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் தோற்று மொத்தம் 4 புள்ளிகளுடன் தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியிருந்தது.

இதற்கமைய குழு ஏ இல் இருந்து 7 புள்ளிகளுடன் முதல் இடம்பிடித்த இந்தியா மற்றும் 6 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடம்பிடித்த அமெரிக்கா ஆகிய அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றன. குழு பி இல் தான் எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற அவுஸ்திரேலிய அணியும், 5 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும் 2ஆம் சுற்றுக்குத் தெரிவானது.

அதேபோன்று குழு சீ இல் இருந்து 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 6 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தினைப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணியும் தெரிவானது. மேலும் குழு டீ இல் தொடர் வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்ற தென்னாபிரிக்க அணியும், 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று பங்களாதேஷ் அணியும் சுப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்தன.

அதற்கமைய குழு ஏ இல் முதலிடம் பெற்ற இந்திய அணி, குழு பீ இல் முதலிடம் பெற்ற அஸ்திரேலியா , குழு சி இல் 2ஆம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் குழு டீ இல் 2ஆம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் சுப்பர் 8 சுற்றின் குழு ஒன்றில் இடம்பிடித்துள்ளன.

அதேபோல் குழு சீ இல் முதலிடம் பிடித்த மேற்கிந்தியத் தீவுகள், குழு டீ இல் முதலிடம் பிடித்த மேற்கிந்தியத் தீவுகள், குழு ஏ இல் 2ஆம் இடம் பிடித்த அமெரிக்கா மற்றும் குழு பீ இல் 2ஆம் இடம்பிடித்த இங்கிலாந்து ஆகிய அணிகள் சுப்பர் 8 சுற்றின் குழு 2 இல் இடம்பிடித்துள்ளது.

அதற்கேற்ப நாளை (19) திகதி சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி அமெரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளது. இச்சுற்றில் ஒரு அணி குழுவிலுள்ள மற்றைய 3 அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியில் பங்கேற்று குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளது. அதற்கமைய குழு ஒன்றில் முதலிடம் பிடிக்கும் அணி குழு 2இல் 2ஆம் இடம் பிடிக்கும் அணியுடன் முதல் அரையிறுதிப் போட்டியிலும், குழு 2இல் முதல் இடம்பிடிக்கும் அணி குழு 1இல் 2ஆம் இடம் பிடிக்கும் அணியுடன் 2ஆவது அரையிறுதியிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *