உள்நாடு

FFSL இன் D தர பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார் உடற்கல்வி ஆசிரியர் உமர் ஹத்தாப் முஹம்மது பர்ஹான்

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பயிற்றுவிப்பாளர் D சான்றிதழை பெற்று அங்கீகாரம் பெற்ற உதைப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார் கற்பிட்டி நாரக்கள்ளி தமிழ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் உமர் ஹத்தாப் முஹம்மது பர்ஹான்.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 42ஆவது உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையகமான பெடகனவில் இடம்பெற்றது.

இப் பாடநெறியினை பாடநெறியின் பணிப்பாளர் சம்பத் பெரேரா அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து வழங்கினார். அத்துடன் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் பங்கேற்பாளர்களுக்கு உரையாற்றியிருந்தார். அதில் இலங்கையில் கால்பந்தாட்ட வளர்ச்சியில் பயிற்சியாளர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.

மேலும் ‘D’ பயிற்சிச் சான்றிதழில் பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு இளம் வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி அறிய பல்வேறு நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இதில் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது.

அத்துடன் இப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி நெறியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், கல்பிட்டி நாரக்கள்ளி தமிழ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியருமான உமர் ஹத்தாப் முஹம்மது பர்ஹான் பங்கேற்று இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற D தர பயிற்றுவிப்பாளர் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். மேலும் இவர் இலங்கை மெய்வள்ளுனர் சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற தரம் 4 நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *