உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் நடாத்தும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் நினைவு தினப் போட்டி – 2024

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால்  நினைவு தினக் கட்டுரைப் போட்டி நடாத்தப்படவுள்ளது.
“முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின் கறை படியாச் சேவைகள்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும்.
கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகளாக, போட்டிக்கான ஆக்கங்கள் தழிழ் மொழி மூலம் மாத்திரம் எழுதப்படல் வேண்டும், ஏ4 தாள்களின் ஒருபக்கத்தில் மாத்திரம், நான்கு தாள்களிற்கு குறையாமல் ஆக்கம் இருத்தல் வேண்டும், ஆக்கங்கள் அவரவர் சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும், 10 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் உட்பட ஏனைய அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது, தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும், கட்டுரை ஆக்கங்கள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும், ஆக்கத்தின் இறுதிப் பக்கத்தின் பின்புறம் உங்கள் பெயர், முகவரி மற்றும் வட்ஸ்அப் இலக்கம் என்பனவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பவும், அத்துடன் அஞ்சல் உறையின் இடதுபக்க மேல் மூலையில் ” ஏ.ஆர்.எம். மன்சூர் நினைவு தினப் போட்டி ” எனக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2024.07.12 ஆம் திகதியாகும். முடிவுத்திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கட்டுரைப் போட்டி இணைப்பாளர்,
கமு/ கமு/ எம். எஸ். காரியப்பர் வித்தியாலயம்,
பொலிவேரியன் கிராமம்,
சாய்ந்தமருது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *