விளையாட்டு

அவமானகரமான தோல்விக்கு நானும், அணியும் பொறுப்பேற்கிறோம். – வனிந்து ஹசரங்க

9ஆவது ரி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியதன் காரணமாக அணித்தலைவராகவும், வீரராகவும் தாம் வருத்தமடைவதாக இலங்கை ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

ரி20 உலகக்கிண்ண தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான தனது இறுதி லீக் போட்டியின் 83 ஓட்டங்களால் இத் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ரி20 அணியின் தலைவரான வனிந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

‘அணியில் திறமையான பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் துடுப்பாட்டக்காரர்களின் பலவீனம் காரணமாக ரி20 உலகக் கிண்ண போட்டியிலிருந்து முன்கூட்டியே வெளியேற நேரிட்டது. இலங்கை அணியின் குறைபாடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. இலங்கை அணியைச் சுற்றியுள்ள ரசிகர்களை கோபப்படுத்தும் நோக்கில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், போட்டிகளில் வென்றாலும் தோல்வியடைந்தாலும் பார்வையாளர்கள் இலங்கை அணியைச் சுற்றியே இருப்பார்கள். உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட இந்த அவமானகரமான தோல்விக்கு தானும் அணியும் பொறுப்பேற்போம்.’ என வனிந்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *