அல் ஜீரியாவிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நேற்று புனித மக்கா வந்து சேர்ந்த 130 வயது நிரம்பிய மூதாட்டி..!
அல் ஜீரியாவைச் சேர்ந்த இந்த மூதாட்டி வியாழக்கிழமை (13) , புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, புனித மக்கா வந்து சேர்ந்தார்.
இந்த மூதாட்டியின் பெயர் Sarhouda Setit என்பதாகும். இவருக்கு 130 வயதாகிறது.
இந்த முறை புனித ஹஜ் யாத்திரைக்கு வந்தவர்களில் மிகவும் வயதான யாத்திரிகர்.
தனது வயதையும் மீறி, புனித ஹஜ் மீதான இவரது பேரார்வம், உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சவூதி அரேபியாவின் மிக வயதான யாத்திரிகர் என்பதால், இம்மூதாட்டியின் வருகையை சவூதி ஏர்லைன்ஸ் கொண்டாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )