உள்நாடு

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற உழ்ஹிய்யா வழிகாட்டல் கருத்தரங்கு

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (14) புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இஷாத் தொழுகையை அடுத்து உழ்ஹிய்யா வழிகாட்டல் கருத்தரங்கு ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ்(மிஸ்பாஹி) தலைமையில் நடைபெற்றது.

புத்தளம் நகர சபையின் உயர் அதிகாரி எம். நெளஷாத் (A.O)  உழ்ஹிய்யா கொடுப்பதற்கு முஸ்லிம்கள் பின் பற்ற வேண்டிய நாட்டு சட்டங்கள் பற்றிய தெளிவு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அஷ்ஷேக் எம். நஜிப்தீன் (ஹஸனி) அதிபர் அப்துல் மஜீத் எகடமி அவர்களால் உழ்ஹிய்யாவின் மார்க்க சட்டங்கள் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபையால் தயாரிக்கப்பட்ட உழ்ஹிய்யாவின் சட்டங்கள் என்ற நூல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை சிறப்பாக செய்தமைக்கு அஷ்ஷேக் நஜிப்தீன் (ஹஸனி)க்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) இனால் ஜம்இய்யாவின் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டு கப்பாரத்துல் மஜ்லிஸ் துஆவுடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(ஊடகப்பிரிவு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளை)
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *