விளையாட்டு

சகலதுறையில் பிரகாசித்த இலங்கை மகளிர் அணியிடம் தோற்றுப் போனது மே.இ. தீவுகள்.

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹம்பாந்தேட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சமரி அத்தபத்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 47.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஹெய்லி மெத்யூஸ் 38 ஓட்டங்களையும், ஸ்டெபானி டெய்லர் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுகன்டினா குமாரி மற்றும் கவிஷா டில்ஹானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பின்னர் எட்டக்கூடிய 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த இலங்கை அணிக்கு சமரி அத்தபத்து 40 ஓட்டங்களையும், ஹசினி பெரேரா 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததுடன், ஹர்சித்த சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 34.1 ஓவர்களில் 4 வவிக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரில் 1:0 எனவும் முன்னிலை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *