உள்நாடு

இனி இவர்களும் வரி கட்ட வேண்டும்.

வாடகை வீடுகளுக்கு வருமான வரியை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது.

இலங்கையில் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி முறையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த புதிய வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்தும் யோசனையை சர்வதேச நிதி நிதியம் முன்மொழிந்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளதால் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் பல்வேறு நிபந்தனைகளை அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒருகட்டமாகவே அடுத்த ஆண்டு முதல் வாடகை வீடுகளுக்கான வரியை அறிவிடும் யோசனையும் முன்மொழியப்படடுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *