ஆப்கான் ஆதிக்கம் தொடர, முதல் சுற்றுடன் நடையைக் கட்டும் நியூஸிலாந்து.
9ஆது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் குழு சீ இல் இன்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பபுவா நியூகினியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி சுப்பர் 8 வாய்ப்பை பெற்றுக் கொள்ள, இக் குழுவிலுள்ள நியூஸிலாந்து அணி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.
9ஆது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீகள் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறியிருக்கின்றன. அந்த வகையில், இன்று காலை நடைபெற்ற தொடரின் 29ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பின்னர் பதிலளித்த ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் காரணமாக, நடப்பு உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் குழு சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி தான் சந்தித்துள்ள 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமையால் லீக் சுற்றுடன் உலகக்கிண்ணத் தொடரிலிருந்து நடையைக் கட்டுகின்றது.
இதற்கமைய குழு சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகள் முதல் இரு இடங்களில் உள்ளதுடன், இரு அணிகளும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக இவ்விரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)