உள்நாடு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் செயலாளர் சட்டத்தரணி அர்சத் ரைசானுக்கு கௌரவம்..!

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி வி.அர்சத் ரைசானை கௌரவிக்கும் நிகழ்வு  (12) புதன்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்ட்டோரன்டில் இடம்பெற்றது.
நீதிக்கான மய்யம் – ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் அதன் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சானின் நெறிப்படுத்தலில் ஸ்தாபகத் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் இராஜங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எச்.எம்.ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் நீதிக்கான மய்யம் – ஸ்ரீலங்கா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொருளாளர், தொழிலதிபர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி, சட்டத்தரணி நஜீமா ரைசான் உள்ளிட்ட அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சட்டத்தரணி அர்சத் ரைசானை  நீதிக்கான மய்யம் – ஸ்ரீலங்கா அமைப்பினர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் இராப்போசனம் வழங்கி கௌரவித்தனர்.
சட்டத்தரணி அர்சத் ரைசான்  கல்முனையினை பிறப்பிடமாகவும் மாவடிப்பள்ளியினை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரி மற்றும் ஜாமிய்யா நளீமியா கலாசாலையின்
பழைய மாணவரான இவர் பிரபல சட்டத்தரணியுமாவார்.
இவர் இலங்கை நீதிக்கான மய்யத்தின் சட்ட ஆலோசனை குழுவின் தலைவருமாவார்.
இவர் தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக இம்மாதம் மூன்றாம் வாரத்தில் சவூதி அரேபியாவுக்கு புறப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *