காரைதீவில் “இளைஞர்களிடையே வன்முறை மற்றும் தீவிரவாதத்தை தடுத்தல் ” செயலமர்வு..!
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் வழிகாட்டலில் GAFSO தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் நெறிப்படுத்தலில் பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களை வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளுக்கமைவாக *இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் தீவிரவாதபோக்கு சிந்தனைகள் தூண்டப்படுவதிலிருந்து தடுத்தல்* எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சி இடம்பெற்றது.”
இளைஞர்களிடையே வன்முறை தீவிரவாதத்தை தடுக்க போதைப்பொருள் தடுப்பு” எனும் தலைப்பிலான விரிவுரை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் வடகிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம்.றஷாட் அவர்களினால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காரைதீவு பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் GAFSO ன் மாவட்ட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
(எம்.ஏ.ஏ.அக்தார்)