உள்நாடு

மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலில் நீண்ட காலம்கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.ஐ.எம் இப்ராஹீம் காலமானார்

கொழும்பு பம்பலபிட்டி நிமல் ரோட் கொழும்பு ( Majmaul khairath jummah masjid Nimal road) மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலில் நீண்ட காலம் (சுமாராக 32 வருடங்கள்) கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.ஐ.எம் இப்ராஹீம் அவர்கள் நேற்று 12 ஆம் திகதி காலமானார்.

அன்னார் மெடிகே பெந்தனிகொட நாரம்மலையை பிறப்பிடமாகவும், மினுவாங்கொடை கள்ளொழுவையை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.

அன்னார் மர்ஹூம் அல்ஹாஜ் மௌலவி எம்.ஐ.எம் சூஃபி (இம்தாதி), கலிஃபதுஷ் ஷாதுலிஅல்ஹாஜ் மௌலவி எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.எம் மும்தாஸ் (நுலாரி), சியம்பலாங்கஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம் அன்சார், மற்றும் முஸ்லிம் விவாகப் பதிவாளர் (குருநாகல் மாவட்டம்) எம்.ஐ.எம் மாஹிர் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

அப்துல்லாஹ் (ரௌலி), அஹ்மத் (மஹ்லரி), முஹம்மத் (பாதிபி) ஆகியோரின் சிறிய தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை மின்வாங்கொடை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(பேருவளை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *