புத்தளத்தில் உழ்ஹிய்யாவுக்காக பிராணிகளை அறுக்கும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
உழ்ஹிய்யா தொடர்பாக முக்கூட்டு தலைமைகள் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் நகர சபை) ஆகியன இணைந்து எடுத்த முடிவுகளுக்கு இணங்க உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்ற மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்களில் 35 இடங்களில் இருந்து மாடு அறுப்பதற்கான அனுமதி கேட்டு கடிதம் தரப்பட்டுள்ளது.
நேற்று 12.06.2104 புதன்கிழமை நகர சபையின் உயர் அதிகாரிகள் நகர சபையின் AO நவ்சாத், நகர சபையின் சுகாதார பிரிவு பொறுப்பாளர் அஸ்வர், நகர சபையின் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் இர்பான் அலி, சுகாதார திணைக்கள பொறுப்புதாரி PHI ஜனத் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் ஆகியோர்கள் இணைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அறுக்கும் இடம் பார்வையிட்டதுடன் நாட்டின் சட்டங்களை அறிய படுத்திய பின் அனுமதிகள் வழங்கப்பட்டன.
உழ்ஹிய்யா பிராணிகளின் கழிவுகளை பொது இடங்களில் வீசுவதை முற்றாக தவிர்ந்துகொள்ளுங்கள். கழிவுகளை போடுவதற்காக நெடுங்குளம் மைதானத்தில் வெட்டப்பட்டுள்ள பிரத்தியேக குழிகளிலும், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ட்ரக்டர் வண்டிகளிலும் கழிவுகளை போடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகர கிளை