உள்நாடு

ஒலுவில் துறைமுக மீள்நிர்மான ஆராய்வில் தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் துறைசார் நிபுணர்களின் பங்கேற்ப்பு

நிலையான தொழில்நுட்ப தீர்வுகளின் மூலம் ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும் வசதிகள் மற்றும் வளங்களை பயன்தரு அடிப்டையில் செயற்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் ஆராயும் கூட்டம் கடற்றொழில் அமைச்சில் (11) இடம்பெற்றது.
ஒலுவில் துறைமுகத்தை புனரமைப்புச் செய்து பயனுடையதான திட்டங்களை முன்னெடுக்கும் திட்ட வரைபுகளை துறைமுக அதிகாரசபை மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (KOICA) போன்ற நிறுவனங்கள் அமைச்சரிடம் முன்வைத்துள்ளன. அந்த முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயவும் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியில், இது குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை அமைச்சரிடம் சமர்ப்பிக்க பங்குபற்றுணர்களை உள்ளடக்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு அமைச்சின் செயலாளரின் அழைப்பின் பெயரில் தென்கிழக்குப் பல்கலைக்கழக நிபுணர் குழு ஒன்றினை உபவேந்தர் அனுப்பி வைத்தார். அக்குழுவுக்கு கலாநிதி எம்.எம். முனீப் தலைமை தாங்க சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.டி.என்.ரி. குமார மற்றும் பல்கலைகழக எந்திரி எம்.எஸ்.எம். பஸீல் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இக்கலந்துரையாடலின்போது பிரதேச அரசியல் வாதிகளின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சு, துறைமுக அதிகாரசபை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம், கடற்படை அதிகாரிகள், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பீ.ரீ.எம்.இர்பான் மற்றும் ஒலுவில் மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *