உள்நாடு

சாய்ந்தமருதில் ‘பெண் ஆயுள்’ எனும் தலைப்பில் பெண்களுக்கான செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம மட்ட சமுதாய அடிப்படை அமைப்பின் பெண் உறுப்பினர்களுக்கான ‘பெண் ஆயுள்’ எனும் தலைப்பில் உணவு பழக்க வழக்கமும், தாய்,சேய் பராமரிப்பு மற்றும் குடும்ப நலத் திட்டம் தொடர்பான செயலமர்வு சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீனின் நெறிப்படுத்தலில் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வின் வளவாளராகவும் விசேட அதிதியாகவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்ஷத் காரியப்பர் கலந்து கொண்டார். நிகழ்வில் ‘பெண் ஆயுள்’ எனும் தலைப்பில் உணவு பழக்க வழக்கமும் தாய்,சேய் பராமரிப்பு, தொற்றா நோய், மற்றும் குடும்ப நலத்திட்டம் பற்றிய பூரண விளக்கத்தினை டாக்டர் அர்ஷத் காரியப்பர் வழங்கினார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் கே.எம்.கபீர், செயலாளர் எம்.ஜானூன், பொருளாளர்; ஏ.ஆர்.ஷர்மிலா உள்ளிட்ட சமுதாய அடிப்படை அமைப்பின் பெண் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *